(The Hi - Tech Institution)
Jairam Arts & Science College
Salem - 636008
Co.Ed. Affiliated to Periyar University, Tamil Nadu
கல்லூரியின் சிறப்பு அம்சங்கள்
- மாணாக்கர்களுக்கு வகுப்பறையில் காண்பிக்கப்படும் அனைத்துக் காணொலிகளையும் jairaminfo.in என்கிற இணையதளத்தில் பெற்றோர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அலைபேசி வாயிலாகக் காணலாம்.
- கல்லூரி தொடங்கும் முதல் நாளே அனைத்துப் பாடங்களுக்கும் தனித்தனியாக பாடத்திட்டம் (Lesson Plan) வழங்கப்படும்.
- அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் பல்கலைக்கழகம் நெறிமுறைப்படி பாடங்கள் முழுமையாக நடத்தப்படுகின்றன.
- அனைத்து வசதிகளோடு கூடிய 300 கணினிகளைக் கொண்ட 4 கணினி ஆய்வகங்கள் (Computer Science Lab) உள்ளன.
- நவீன வசதிகளோடு அனைத்து செய்முறைப் பயிற்சிகளும் அறிவியல் துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும் தனித்தனியா க மேற்கொள்ளக் கூடிய வகையில் உயிர்-அறிவியல் (Life Science Lab) ஆய்வகங்கள் உள்ளன.
- செய்முறைப் பயிற்சிகள் (Practical) அனைத்தும் மாணக்கர்களுக்கு முழுமையாக நடத்தப்படுகின்றன.
- அனைத்து செய்முறைப்பயிற்சி வகுப்புகளும் (Live Practical Video) நேரடி காணொலிகளின் மூலம் அனைத்து மாணக்கர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன.
- கல்லூரி நூலகத்தில் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் இதழ்கள் (Magazines And Journals) துறைவாரியாகவும் பாடவாரியாகவும் இடம்பெற்றுள்ளன. மேலும் நூலகம் Delnet, Inflibnet, British Council Library, World Link Library ஆகியவற்றிலிருந்து இலட்சக்கணக்கான புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதிகளோடு உள்ளது.
- வகுப்பறைகள் அனைத்தும் 100 சதவீதம் Smart Class Room ஆகச் செயல்படுகின்றன. ஆசிரியர்கள் LCD Projector Power Point Presentation மூலமும் பாடம் சார்ந்த காணொலிகளின் Video மூலமும் பாடங்களை நடத்துகின்றார்கள்.
- வேலைவாய்ப்பிற்காக மத்திய அரசாங்கத்தால் நடத்தப்பெறும் Swayam என்ற Online Course - ஐ மாணாக்கர்கள் கல்வி பயில்வதன் பொருட்டு அவர்களுக்குரிய தேர்வுக்கட்டணத்தை கல்லூரி நிர்வாகமே செலுத்தி மாணாக்கர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.
- மாணக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கக் கல்வி பயிலும் காலங்களிலேயே Tally, Photoshop, Python, R Programming, Ms Office, Web Desigining போன்ற சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன .
- மாணாக்கர்கள் பன்மொழிப் புலமையினைப் பெற்றிட ஆங்கிலத்திறன் பயிற்சி (English Language Training Program) அதற்கான பாடத்திட்டங்களோடு (Syllabus And Scheme) ஒவ்வொரு பருவத்திலும் (Semester) இலவசமாக வழங்கப்படுகின்றது.
- வேலைவாய்ப்பினைப் பெற்று மாணாக்கர்களது எதிர்காலம் சிறந்திட Aptitude, Memory Tranining, Communication, Employablity skills, Soft skills போன்ற பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன .
- உயிர்- அறிவியல் துறைசார்ந்த மாணாக்கர்களுக்கு DMLT (Diploma In Medical Laboratory Technician) பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
- மாநில அரசால் நடத்தப்பெறும் போட்டித் தேர்வுகளில் (Group Exam) மாணாக்கர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக நாள்தோறும் 10 நிமிடங்கள் பொது அறிவு சார்ந்த காணொலிகள்(Video) அவர்களுக்கு காண்பிக்கப்படுகின்றன.
- கல்விக்கட்டணத்தை Online மூலமாகப் பெற்றோர்கள் செலுத்தும் வசதி செய்துதரப்பெற்றுள்ளது.
உள் கட்டமைப்பு வசதிகள்
- தமிழகத்திலேயே முதல்முறையாக எங்களது கல்லூரியில் மட்டுமே அனைத்து வகுப்புகளிலும் LCD Projector வசதியுடன் கூடிய Smart Class Room அமைக்கப்பட்டுள்ளது.
- காற்றோட்டமான வெளிச்சம் நிறைந்த வகுப்பறைகள்.
- குளிரூட்டப்பட்ட ஒளி/ஒலி அரங்கங்கள் (Auditorium) அமைக்கப்பட்டுள்ளது.
- இணையதள வசதி(Broad Band Internet Facility).
- சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ,ஜெனரேட்டர் வசதி.
- மாணாக்கர்களுக்காக விளையாட்டு மைதானம்.
- இணையதள வசதியோடு கூடிய கணினிகளைக் கொண்டுள்ள ஆசிரியர்களுக்கான அறைகள்.
- பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் பிள்ளைகள் குறித்தத் தகவல்களை இணையத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வசதி.
திறன் மேம்பாடு (Personality Development)
- மாணாக்கர்கள் தங்களுடைய நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு Memory Training(நினைவாற்றல் பயிற்சி) வழங்கப்படுகிறது.
- மாணாக்கர்கள் உயர்ந்த குறிக்கோளினை அடைவதற்காக Motivational Training (ஊக்கமூட்டும் பயிற்சி) அளிக்கப்படுகிறது.
- மாணாக்கர்களின் தனித்திறனை வளர்க்கும் விதமாக கைவினைப்பொருட்கள் குறித்த பயிற்சி வகுப்பு (Hand craft work)) அழகுக்கலை நிபுணர் பயிற்சி (Beautician course)போன்ற பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.
- ஆங்கிலத்திறனை மேம்படுத்திக் கொள்ள மாணாக்கர்களுக்கு English Language Training பயிற்சி வகுப்பு வழங்கப்படுகிறது.
- மாணாக்கர்கள் வேலைவாய்ப்பினைப் பெறவும் தனித்திறமையை வளர்த்துக்கொள்ளவும் (Communication, Confidence, Leadership skill, Time Management, Emotional Intelligence skill அடங்கிய Soft skill (மென்திறன் மேம்பாட்டுப் பயிற்சி) பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.
- எந்தவிதமான பிரச்சனைகளையும் எளிமையான முறையில் பொறுமையாகக் கையாளக்கூடிய விதத்தில் மாணாக்கர்களுக்கு உளவியல் மேம்பாட்டுப் பயிற்சி (Psychology Training) வழங்கப்படுகிறது.
விழாக்கள் (Functions)
-
மாணாக்கர்களுக்காக கல்லூரியில் கீழ்க்கண்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
- Freshers Day - முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா
- Independene Day - சுதந்திர தின விழா
- Teachers Day - ஆசிரியர் தின விழா
- Friendship Day - நண்பர்கள் தின விழா
- New year Day - புத்தாண்டு கொண்டாட்டம்
- Rebuplic Day - குடியரசு தின விழா
- Annual Day - ஆண்டு விழா
- Graduation Day - பட்டமளிப்பு விழா
- Womens Day - மகளிர் தின விழா
- National Leaders Birthday - தேசத்தலைவர்கள் பிறந்தநாள் விழா
- Onam Celebration - ஓணம் விழா
- Vinayagar Chathurthi - விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
- Deepavali Celebration - தீபாவளி கொண்டாட்டம்
- Pongal Celebration - பொங்கல் விழா கொண்டாட்டம்
விழாக்கள் என்ற பெயரில் மணாக்கர்களைத் திசைதிருப்பி அவர்களிடம் எந்த ஒரு மறைவுக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
குழுக்கள் (Committee)
நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், ரோட்டரி சங்கம், நுகர்வோர் சங்கம், Junior Jaycees Wing, Red Ribbon Club, Sapling Club, Internal Committee For Students With Disability, ராகிங் எதிர்ப்பு குழு (Anti Ragging Committee), பாலியல் வன்கொடுமை தடுப்புக் குழு (Anti Sexual Harassment), குறைதீர்ப்புக்குழு (Grievance Cell), முன்னாள் மாணவர்கள் குழு (Alumni Association), ஒழுங்கு நடவடிக்கைக்குழு (Disciplinary), தமிழ் மன்றம் போன்ற பல குழுக்கள் கல்லூரியில் மாணாக்கர்களுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.